Monday, January 9, 2012

தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தை துவக்கினார் நஜாத்

imagesCAH00SW7
டெஹ்ரான்:ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தென் அமெரிக்க நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை துவக்கியுள்ளார். ஐந்து தினங்கள் அவர் நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
அணுசக்தி திட்டங்களின் பெயரால் அமெரிக்கா கூடுதல் கடுமையான நடவடிக்கைகளுக்கு மேற்கொண்டுவரும் வேளையில் நஜாதின் சுற்றுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஏகாதிபத்திய நாடுகள் பிராந்தியத்தில் தாங்கள் விரும்பும் எதனையும் செய்யலாம் என கருதுகின்றனர். ஆனால், அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தீர்மானங்களை சுயமாக எடுப்பதற்கு விழிப்புணர்வு பெற்றுவிட்டன என்றும் நஜாத் கூறியுள்ளார்.
வெனிசுலாவிற்கு முதலில் செல்கிறார் நஜாத். அதிபர் ஹியூகோ சாவேஷுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல ஒப்பந்தங்கள், மற்றும் திட்டங்கள் இரு நாடுகள் இடையே உருவாகும் என ஈரான்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிகரகுவா, கியூபா, ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கும் நஜாத் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
சாவேஸ் மற்றும் நிகரகுவா நாட்டின் அதிபர் ஏரியல் ஒர்ட்டேகாவையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களின் நட்சத்திரங்கள் என நஜாத் புகழாரம் சூட்டியுள்ளார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒர்ட்டேகாவின் பதவி பிரமாண நிகழ்ச்சியிலும் நஜாத் பங்கேற்பார். ஈரானுடன் கூடுதல் உறவை ஏற்படுத்துவதற்கு எதிராக தென் அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment