- எகிப்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி (Muslim Brotherhood) பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது.
- முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், முதன்முறையாக அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. சுமார் 6 வாரகாலத்திற்கு கட்டம் கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலின் இறுதி முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. இதில், இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி (FJP) அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்று முதலாவதாகவும்,
- The Hardline Salafist Nour கட்சி இரண்டாவது இடத்தையும், The Liberal New Wafd கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
- இம்முடிவுகள் படி மூன்றில் இரண்டு பெரும்பான்மையான ஆசனங்களை இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி கைப்பற்றியுள்ளது. எனினும் நாட்டின் புதிய அதிபராக தெரிவாகுபவரே அரச அதிகார சபையை நியமிக்க முடியும் என்பதால் இக்கட்சியினால் இப்போதைக்கு நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி http://www.4tamilmedia.com
Saturday, January 21, 2012
எகிப்து பாராளுமன்ற தேர்தல் : இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி மாபெரும் வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment