Saturday, January 21, 2012

டெஹ்ரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் கொலை


Tehran, Iran: Iran has accused the US and Britain of being behind the assassination of an Iranian nuclear scientist this week in Tehran. Iran’s foreign ministry has sent a diplomatic letter to the US saying that it has “evidence and reliable information” that the CIA provided “guidance, support and planning” to assassins “directly involved” in Mostafa Ahmadi-Roshan’s killing, the IRNA state news agency reported yesterday (Saturday).

இந்தவாரம் தலைநகர் டெஹ்ரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் கொலையில், அமெரிக்க பிரிட்டிஷ் உளவுத்துறைகள் நேரடியாகச் சம்மந்தப் பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஈரான் நேற்று (சனிக்கிழமை) குற்றம்சாட்டியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சு இது தொடர்பான ராஜதந்திர கடிதம் ஒன்றை அமெரிக்காவிடம் சேர்ப்பித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்த ராஜதந்திர கடிதத்தை சுவிட்சலாந்து தூதரகத்திடம் நேற்று கொடுத்திருக்கிறது ஈரானிய வெளியுறவு அமைச்சு. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 1979-ம் ஆண்டில் இருந்து ராஜதந்திர உறவுகள் கிடையாது என்பதால், அமெரிக்க தூதரகம் ஏதும் ஈரானில் கிடையாது.
இரு நாடுகளுக்கும் பொதுவான நாடாக சுவிட்சலாந்து கருதப்பட்டு, அமெரிக்கா தொடர்பான நடவடிக்கைகளை டெஹ்ரான் நகரில் உள்ள சுவிஸ் தூதரகமே கவனித்து வருகின்றது.
புதன்கிழமை கொல்லப்பட்ட விஞ்ஞானியின் இறுதி ஊர்வலத்தின்போது அமெரிக்க ஜனாதிபதியின் போஸ்டர்
ஈரான் வழங்கியுள்ள கடிதத்தில், “எமது விஞ்ஞானி கொல்லப்பட்டத்தில் உங்கள் (அமெரிக்கா) நாட்டு உளவுத்துறைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இந்தக் கொலையின் திட்டமிடலில் சி.ஐ.ஏ. பங்கு கொண்டது தொடர்பாக நம்பிக்கைக்குரிய தகவல்களும் எம்மிடம் உள்ளன” என்று எழுதப்பட்டுள்ளது.
ஈரானிய விஞ்ஞானி அஹ்மாடி ரோஷான் கடந்த புதன்கிழமை மர்மமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாக விறுவிறுப்பு.காம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட செய்தியை “ஹாலிவூட் ஸ்டைலில் மற்றொரு விஞ்ஞானியை கொன்றது சி.ஐ.ஏ.!” என்ற தலைப்பில் கீழே ‘தொடர்புடையவை’ செக்ஷனில் காணலாம்.
அமெரிக்காவுக்கான கடிதத்தை சுவிஸ் தூதரகத்தின் ஊடாக கொடுத்ததுபோல, பிரிட்டனுக்கும் ஒரு கடிதம் ஈரானிய வெளியுறவு அமைச்சிடம் இருந்து போயிருக்கின்றது. அந்தக் கடிதத்தில் பிரிட்டிஷ் உளவுத்துறையும் இந்த கொலை திட்டமிடலில் பங்கு கொண்டது குறித்து தமக்கு தெரிய வந்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற விவகாரங்களில் ஈரான் தனது குற்றச்சாட்டை ஊடகங்களுக்கு தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொள்வதுதான் வழக்கம். இம்முறைதான், ராஜதந்திர கடிதங்கள் மூலம் தமது குற்றச்சாட்டை தொடர்புடைய நாடுகளுக்கு நேரிலேயே தெரிவித்துள்ளது. அந்த வகையில் இதை மிக சீரியசாக ஈரான் எடுத்துக் கொள்வது புரிகிறது.
ஈரானிய கூட்டுப் படைகளின் பேச்சாளர் ஜெனரல் மாசொத் ஜசாயெரி, “ஈரானுக்குள் நடத்தப்படும் குற்றச் செயல்களுக்கு மறைமுக உதவி செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்பட உள்ளது. அந்த முடிவு எடுக்கப்பட்ட பின், அமெரிக்க, பிரிட்டிஷ் உளவுத் துறையின் பொறுப்பாளர்களுக்கு அந்தத் தண்டனை  வழங்கப்படும்” என்றார்.
அதாவது, ஈரானுக்குள் இல்லாத நிலையில் இரு நாட்டு உளவுத் துறைகளின் டைரக்டர் லெவல் அதிகாரிகளுக்கு ஈரானிய நீதிமன்றம் தண்டனை வழங்கவுள்ளது.
அத்துடன் ஜெனரல் ஜசாயெரி சர்வதேச அணுசக்தி அமைப்பையும் (IAEA-International Atomic Energy Agency)குற்றம் சாட்டியுள்ளார். “IAEA தமது அறிக்கைகளில் வேண்டுமென்றே ஈரானிய அணு விஞ்ஞானிகளின் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம், உளவுத்துறைகள் எமது விஞ்ஞானிகள்மீது குறி வைக்க உதவுகிறார்கள்” என்பது அவரது குற்றச்சாட்டு.
ஈரானிய விஞ்ஞானிகளின் பெயர்களை IAEA-க்கு வழங்குவதே சி.ஐ.ஏ.-தான் என்பது இந்த ஜெனரலுக்கு தெரியாதா?
நன்றி விறுவிறுப்பு 

No comments:

Post a Comment