அங்காரா:துருக்கி விண்ணில் செலுத்தவிருக்கும் மேன்மையான செயற்கை கோளால் இஸ்ரேலின் அரசியல்வாதிகளுக்கும், இராணுவத்திற்கும் புதியதலைவலி தொடங்கி உள்ளது.
ஒரு பிக்சலை இரண்டு மீட்டருக்கு நெருக்கமான முறையில் புகை படத்தை எடுக்கக் கூடிய செயற்கைகோள் அமெரிக்காவிடம் இருந்த நிலையிலும், அமெரிக்காவில் அவ்வாறு எடுக்க கூடிய புகைப் படங்களை வெளியிட அந்நாட்டின் அலுவலகங்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் ஒரு இடத்தில் தேவையான இடத்தை பெரிது செய்தோ அல்லது முகவரியை கண்டுபிடிக்க கூகுள் எர்த் எனப்படும் வலைத்தளமும் பெரிதும் உதவுகிறது. ஆனால் அப்படிப்பட்ட கூகுள் எர்த் கூட இஸ்ரேலை வெகு தொலைவில் இருந்து மட்டும் புகைப்படம் எடுக்கும் நிலையில் மட்டுமே உள்ளது.
அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள இத்தகைய தொழில்நுட்பத்தை இன்னும் இரண்டு வருடங்களில் அதைவிட மேம்பட்ட மற்றும் மிக நெருக்கமான புகைப் படங்களை எடுக்கக்கூடிய “கோர்ட்டுக்” செயற்கை கோளை வெளியிட போவாதாக துருக்கி தெரிவித்துள்ளது. மேலும் டெல்அவிவ் இதுப் போன்ற புகைப்படங்களை விநியோகிப்பதை விரும்பவில்லை என்றாலும், நாங்கள் அமெரிக்காவைபோல் தடை சட்டம் போட்டு எங்கள் அண்டை நாடுகளை ஏமாற்றப் போவதில்லை, இந்த செயற்கைகோளால் எடுக்கப்படும் புகைப்படங்களை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ இஸ்ரேலின் எதிரிகளுக்கு விற்க நாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேலின் தலைவலி வலுத்ததோடு, மிகவும் பதற்றமான நிலையில் இருக்கிறது.கடந்த ஆண்டு நடந்த ஃப்ளோட்டில்லா தாக்குதலை தொடர்ந்து இன்றுவரை டெல் அவிவ் மற்றும் அங்காரவிற்கு இடையில் சுமூகமான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment