பாக்தாத்:கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சுயாட்சி பிரதேசமான குர்திஸ்தானுக்கு சென்ற ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷிமி, ஜோர்டானில் அரசியல் அபயம் தேடியதாக செய்தி வெளியாகியுள்ளது. வடகிழக்கு குர்திஸ்தானில் சுலைமானிய்யா நகர அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ்விடம் புகலிடம் அளிக்க ஹாஷிமி கோரிக்கை விடுத்துள்ளார் என அச்செய்தி கூறுகிறது. ஈராக்கில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹாஷிமிதான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.பிரதமர் நூரி அல் மாலிக்கியை குறிவைத்து கடந்த நவம்பர் மாதம் பாக்தாதில் பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னால் நடந்த கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல்கள் ஹாஷிமியின் உத்தரவின் படி நடந்ததாக அவரது மெய்க்காப்பாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாஷிமி குர்திஸ்தானுக்கு சென்றார். விசாரணையை குர்திஷ்தானில் நடத்தவேண்டும் என்ற ஹாஷிமியின் கோரிக்கையை ஈராக் சட்ட அமைச்சகம் நிராகரித்தது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment