3 Jan 2012
பாட்னா:பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள சமஸ்டிபுர் நகரத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியான தரம்புரில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்படதாக கூறி முன்பக்கத்தில் போலியான செய்தி வெளியிட்ட முன்னணி ஹிந்தி நாளிதழுக்கு எதிராக அப்பகுதியை சார்ந்த முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் டெல்லியை சேர்ந்த காவல்துறை முகம் மூடிய மூன்று நபரை, அவர்கள் ஏற்கனவே இங்கு வசித்து வந்தததாக கூறி எங்கள் பகுதிக்கு கடந்த டிசம்பர் 30 அன்று அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் மூவரில் ஒருவரை அடையாளம் கண்டு, அவனின் பெயர் ஜாவித், இரண்டரை மாதங்கள் அவனது மனைவியுடன் தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும், பின்னர் ஆகஸ்ட் 2010-ல் அவர் அங்கிருந்து காலி செய்து விட்டதாகவும் தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்து புறப்பட்ட காவல்துறை அந்த மூன்று பேரையும் புதிகன்டாக் ஆற்றின் அருகில் இருந்த மஸ்ஜிதுக்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த மஸ்ஜித்தின் இமாம், எதற்க்காக இங்கு வைத்து புகைப்படம் எடுக்கிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு நாங்கள் ஆற்றையும், ஆற்றங்கரையையும் எடுக்கிறோம் என்று மலுப்பிவிட்டு அங்கு இருந்து காவல்துறையை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அடுத்த நாள் செய்தித்தாளில் இந்த பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியது.
இதனால் கொதித்தெழுந்த அப்பகுதி முஸ்லிம்கள் அப்பத்திரிக்கைக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டனர். இப்படி ஒரு செய்தி வெளியானதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, பொய் செய்தியை பரப்பி எங்கள் பகுதிக்கு களங்கம் விளைவித்த அந்த பத்திரிக்கைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment