அஹமதாபாத்:மதமாற்றத்திற்கு முறைப்படி அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறாததால் கௌஷங்கினி காதியா-அல்தாப் மிர்சா தம்பதி இப்போது சிக்கலில் உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்லாமிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கௌஷங்கினிக்கு நவ்தாத் பள்ளியின் மவ்லவி திருமணம் செய்துவைத்தார்.
குஜராத் மத சுதந்திர சட்டத்தின்படி, ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் அந்த அனுமதியை பெறாமல் திருமணம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் அல்தாப்பிற்கு எதிராக வேஜல்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். கௌஷங்கினி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி அல்தாப் குற்றமற்றவர் என வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கோர்ட் அவர்களை போலீஸ் பாதுகாப்போடு அல்தாப் வீட்டிற்கு அனுப்பிவைத்தது.
ஆனாலும் கௌஷங்கினியின் தாய் அல்தாப் மற்றும் மௌலவி மீது சட்டவிரோதமாக மதமாற்றம் செய்ததாக புகார் அளித்தார். இவர்களின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து டிசம்பர் 22-ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கௌஷங்கினி திருமணத்திற்கு முன்பு மதமாற்றத்திற்கு தான் வற்புறுத்தப் படவில்லை என்று அஃபீடவிட் எடுத்துள்ளதாக கூறுகிறார். “நான் வற்புறுத்தலினால் மதம் மாறவில்லை. இதை என் விருப்பப்படியே செய்தேன். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஆனால் இது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. போலீஸ்காரர்களும் அவரின் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு எங்களை தொந்தரவு செய்கின்றனர்.” இந்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கௌஷங்கினி கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment