குல்பர்கா: கர்நாடகா மாநிலம் சிந்தகி தாலுகா அலுவலகம் அருகே பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை ஏற்றியது ஸ்ரீராம் சேனா அமைப்பினர் தான் என்ற உண்மை தெரியவந்தது. கர்நாடகா தலித் சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹனுமந்த் "ஸ்ரீராம் சேனா" தேசத்திற்கு எதிரான அமைப்பு என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை ஏற்றிய ஸ்ரீராம் சேனா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குல்பர்கா மாவட்ட கிளை மற்றும் முஸ்லிம் வெல்ஃபேர் அஷோசியெஷன் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து ஸ்ரீராம் சேனா இயக்கத்தை கண்டித்து மினி விதான் செளகாவில் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடகா தலித் சேனா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஹனுமந்த் எல்சங்கி உரையாற்றும்போது ஸ்ரீராம் சேனா அமைப்பு இந்திய தேசத்திற்கு எதிரானது என்றும், எப்பொழுதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு பழியை முஸ்லிம்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் சுமத்தி வருகின்றனர். தலித் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒன்றினைந்து ஃபாசிஸ சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குல்பர்கா மாவட்ட தலைவர் ஷாஹித் நஜீர் மற்றும் முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியஷனின் தலைவர் வழக்கறிஞர் மஜார் ஹுஸைன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
நன்றி சென்னை பாப்புலர் ஃப்ரண்ட்