கெய்ரோ:எகிப்தில் அமெரிக்க அமைப்புகள் உள்பட பதினேழுக்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களின்(என்.ஜி.ஒ) தலைமை அலுவலகங்களில் ராணுவமும், போலீசும் சோதனையிட்டன. இவ்விடங்களில் இருந்து ஏராளமான கம்ப்யூட்டர்களும், இதர ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பொருளாதார உதவியை பெறும் உள்நாட்டு, வெளிநாட்டு என்.ஜி.ஓ தலைமை அலுவலகங்களில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். இவற்றில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு இயங்குவதற்கான போதுமான அனுமதி கூட இல்லை என அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சிகளான டெமோக்ரெடிக், ரிபப்ளிக் கட்சிகளுடன் தொடர்புடைய நேசனல் டெமோக்ரெடிக் இன்ஸ்ட்யூட், இண்டர்நேசனல் ரிபப்ளிக் இன்ஸ்ட்யூட் ஆகிய அமைப்புகளும் இதில் அடங்கும். என்.ஜி.ஓக்கள் எகிப்து சட்டங்களை மீறி செயல்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சோதனை நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் செயல்படும் ஜனநாயக ஆதரவும், மனித உரிமை அமைப்புகளுக்கும் எங்கே இருந்து நிதியுதவி கிடைக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்றும் அதிகாரிகள் கூறினர். அதேவேளையில் எகிப்து அதிகாரிகளின் நடவடிக்கையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. ரெய்டை கண்டித்து எகிப்தில் ஜெர்மனி தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment