21 Jan 2012
காபூல்:ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்ததில் ஆறு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹெல்மந்த் மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காந்தஹாரில் நடந்த இன்னொரு தாக்குதலில் 6 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.
சி.ஹெச்-53 சி ஸ்டாலியன் என்ற ஹெலிகாப்டர்தாம் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் நேட்டோ வட்டாரங்கள் கூறுகின்றன.
மரணம் குறித்து உறுதிச்செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஹெலிகாப்டரில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற செய்தி வெளியாகவில்லை. குறைந்தது 40 பேர் பயணிக்கும் வசதிக்கொண்ட பெரிய ஸ்டாலியன் ஹெலிகாப்டர் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸினுக் ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸினுக் ஹெலிகாப்டர் மீது
தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் 30 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். அல்காயிதா தலைவர் என கூறப்படும் உஸாமா பின் லேடனை கொலைச் செய்ததாக அமெரிக்கா கூறும் நேவி ஸீல் கமாண்டோ யூனிட்டில் 17 பேர் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் 30 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். அல்காயிதா தலைவர் என கூறப்படும் உஸாமா பின் லேடனை கொலைச் செய்ததாக அமெரிக்கா கூறும் நேவி ஸீல் கமாண்டோ யூனிட்டில் 17 பேர் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
ஆப்கான் ஆக்கிரமிப்பிற்கு பிறகு அமெரிக்க ராணுவத்திற்கு கிடைத்த பலத்த அடியாக அச்சம்பவம் மாறியது.
காந்தஹாரில் அமெரிக்க, நேட்டோ ராணுவ தளத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஏழு சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இரண்டு ஆப்கான் ராணுவத்தினர் உள்பட எட்டுபேருக்கு காயம் ஏற்பட்டது. காந்தஹார் விமானநிலைய வாயில் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேட்டோ வாகனங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிவிலியன்கள் 3 பேர் மரணித்தனர் என தாலிபான் கூறியுள்ளது. ஆனால் தாக்குதலைக் குறித்து பதிலளிக்க நேட்டோ வட்டாரங்கள் தயாரில்லை.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment