Thursday, February 23, 2012

பணிப் பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: சிவில் நீதிபதிக்கு போலீஸ் வலை!

பாலியல் வன்புணர்வு
ஹைதராபாத்:வேலியே பயிரை மேய்ந்த கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏது? காவல்நிலையங்களில் கொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும் நடந்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வீட்டு பணிப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு முயன்ற சிவில் நீதிமன்ற நீதிபதியை போலீஸ் தேடி வருகிறதாம்.
ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியைச் சேர்ந்தவர் குரவத் பாலசந்தர். அவர் சட்டபள்ளி நகரில் உள்ள நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக உள்ளார்.
அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் 24 வயதாகும் கலா (பெயர் மாற்றம்). அவர் பார்க்க அழகாக இருப்பதால் அவர் மீது நீதிபதிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீதிபதி நினைத்தார். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.
இந்நிலையில் நீதிபதியின் குடும்பத்தார் அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றனர். இது தான் சமயம் என்று நீதிபதி வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். உடனே இது குறித்து கம்மம் டி.எஸ்.பி. ரங்கன் கௌடிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் 354வது பிரிவின் கீழ் நீதிபதி பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பாலசந்தர் நேற்று மதியம் முதல் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment