Wednesday, 22 February 2012 05:24 MARUPPU மீடியா - தினமணி
இந்தியாவில் முழுக்க முழுக்க பயங்கரவாத செயல்கள் நடக்க காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்.இதற்கான மையத்தின் முழு பொறுப்பும் மத்திய காங்கிரஸ் கட்டுபாட்டில் இருந்தால்தான் முஸ்லிம் தீவிரவாதிகளை காப்பாற்ற முடியும்.முஸ்லிம்களுக்கு சாதகமான எல்லா சட்டமும் காங்கிரஸ் அமுல்படுத்தும்.அப்பதான் வாக்கு பெறமுடியும்.
புது டெல்லி, பிப். 21: தேசிய
பயங்கரவாதத் தடுப்பு மையம் (என்.சி.டி.சி) அமைக்கப்படுவதால் மாநிலங்களின் உரிமைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.
பயங்கரவாதத் தடுப்பு மையம் (என்.சி.டி.சி) அமைக்கப்படுவதால் மாநிலங்களின் உரிமைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையோ, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வையோ பாதிக்கச் செய்வது தேசிய பயங்கரவாதத் தடுப்பு அமைப்பை நிறுவுவதன் நோக்கம் கிடையாது.
இதுவரை தேசியப் புலனாய்வு அமைப்பான ஐ.பி. செய்து வந்த பணிகளைப் போல பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதே இந்த அமைப்பின் முதன்மையான நோக்கமாகும்.
அதனால்தான், தனி அமைப்பாக இல்லாமல் ஐ.பி.யின் ஓர் அங்கமாகவே என்.சி.டி.சி. அமைக்கப்படுகிறது.
எனினும் இந்த அமைப்பு எப்படிச் செயல்படப் போகிறது என்பது தொடர்பான மாநிலங்களின் கவலைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்துமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தனது கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்................................................................................................................................................................................................. முக்கிய குறிப்பு :- இதை ஒரு செய்தியாக மட்டும் வெளியிட வேண்டிய தினமணி, வாசகர் கருத்து என்ற பெயரில், மேற்கண்டவாறு விஷமத்தனம் செய்துள்ளது .