Monday, February 13, 2012

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு ஏழு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: பாப்புலர் பிரான்ட் பொதுக்குழு தமிழக அரசுக்கு கோரிக்கை


Tuesday, February 14th, 2012

Popular Front President Addressing in SGA
President in SGA
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11 ,12 ஆகிய தேதிகளில் தேனீ மாவட்டம் முத்துதேவன்பட்டியில் வைத்து நடைபெற்றது. பாப்புலர் பிரண்டின் மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் காலித் முஹமது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . சிறப்பு விருந்தினர்களாக
பாப்புலர் பிரண்டின் தேசிய துணை தலைவர் முஹம்மத் அலி ஜின்னா அவர்களும், சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்களும் கலந்து கொண்டனர் . பொதுக்குழுவில் பொது செயலாளர் ஏ. காலித் அவர்கள் ஆண்டறிக்கையை சமர்பித்தார் . அதன் பிறகு ஆண்டறிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது . இரண்டாவது நாள் மாநில துணை தலைவர் இஸ்மாயில் அவர்கள் நிறைவுரையுடன் பொதுக்குழு நிறையவுபெற்றது
இப்பொதுக்குழுவில் மத்திய மாநில முஸ்லிம் இட ஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை , வன்முறையை தூண்டும் திரைப்படங்கள் , தீவிரவாத பழி சுமத்தப்பட்டு பல காலம் சிறையில் அல்லலுற்று தற்போது அப்பாவிகள் என விடுதலை செய்யப்படும் முஸ்லிம்கள் , இஸ்ரேலிய சதி , தொடர் மின்வெட்டு, சங்கரன்கோவில் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன


நன்றி http://www.popularfrontindia.org

No comments:

Post a Comment