Saturday, March 3, 2012

இந்தியாவில் 18 வயதிற்கு முன்பே தாய்மை அடையும் 22 சதவீத இளம்பெண்கள்!

தாய்மை
புதுடெல்லி:இந்தியாவின் சாபக்கேடாக மாறிய பால்ய விவாகத்தை(குழந்தை திருமணம்) தொடர்ந்து தேசத்தின் மதிப்பை சீர்குலைக்கும் இன்னொரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் 18 வயது ஆகும் முன்பே 22 சதவீத இளம்பெண்கள் தாயாக மாறுகின்றார்கள் என்று யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
‘ஸ்டேட் ஆஃப் த வேர்ல்ட்ஸ் சில்ட்ரன்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிறக்கும் 1000 குழந்தைகளில் 45 சதவீத குழந்தைகளும் 15 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட பருவமுடைய பெண்களுக்கு பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளில் 3 இல் ஒரு சதவீதம் குழந்தைகள் எடைக குறைவாக(underweight) உள்ளன. ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளில் 45 சதவீதம் போதிய எடை இன்றி உள்ளனர். பல்வேறு விஷயங்களில் நடத்திய ஆய்வின் படி 53 சதவீதம் வளர் இளம்பருவ பெண்களும், 57 சதவீதம் வளர் இளம்பருவ ஆண்களும் கணவன்மார்கள் சில வேளைகளில் மனைவியரை அடிப்பது தப்பு இல்லை என்று கூறியுள்ளனர். இவ்வாறு யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment