Saturday, March 3, 2012

உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியை பிடிக்கும்: கருத்துகணிப்பு முடிவுகள்



7 கட்டமாக நடந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியை அடுத்து பி.எஸ்.பி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் மூன்றாம், நான்காம் இடத்தை பிடிக்கும் என்றும் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்டார் நியூஸ் – ஏசி நீல்சன் நடத்திய தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பில் சமாஜ்வாதி கட்சி 160 இடங்களிலும், பி.எஸ்.பி 86 இடத்திலும் பிஜேபி 80 இடங்களிலும் காங்கிரஸ் 58 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே கருத்து கணிப்பில் சமாஜ்வாதி கட்சி 195 முதல் 210 இடங்களையும் பிஎஸ்பி 88 முதல் 98 இடங்களையும் கைப்பற்றும் என கணிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியா டுடேவின் கருத்து கணிப்பில் சமாஜ்வாதி 145 இடங்களையும் பிஎஸ்பி 130 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 24 நடத்திய கருத்து கணிப்பில் சமாஜ்வாதி கட்சி 185 இடங்களை கைப்பற்றும் என்றும் பிஎஸ்பி 85 இடங்கள், பிஜேபி மற்றும் காங்கிரஸ் 55 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
403 இடங்களை கொண்ட உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வரும் 6ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment