Wednesday, April 20, 2022

போகலூர்

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் போகலூர். இதன் பெயர் புகலூர் என்ற பெயரிலிருந்து மருவி போகலூர் ஆகியது. 

தென்தமிழ்நாட்டின் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். இவர்கள் கி.பி 1501 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். வங்கக்கடற்கரையின் அதிபதியாய் முதலில் புகலூரையும் (போகலூர்) பின்பு இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியள்ளனர்.

சேதுபதி மன்னர்கள்  கி.பி.1501 முதல் கி.பி.1710 வரை சமார் 210 வருடங்கள்  போகலூரை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.இன்றும் சேதுபதி மன்னர்  அரண்மனையின் சிதிலமடைந்த சுவர்கள்  போகலூரில் காணப்படுகின்றன. 

போகலூர் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.

போகலூர் கிராமம் என்ற முறையில் இருந்தாலும் இன்று 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

அரசு சித்த மருத்துவமையம், 

அரசு கால்நடை மருந்தகம், 


ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 

நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி


அரசு அலுவலகங்கள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

கிராம அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகங்கள்,

நூலகம் போன்றவை இந்த ஊரின் சிறப்புகளை பறைசாற்றுகின்றன.

இந்திய தேசம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி இருப்பது என்றால் அது நமது போகலூரில் உள்ள சுங்கச்சாவடி தான் இந்த சிறப்பு அமையும்.

இவ்வளவு  வரலாற்றுக்கு சொந்தமான நமது போகலூர் கூடிய விரைவில் பேரூராட்சி அந்தஸ்தை பெறும் என்பதை நாம் அனைவரும்  எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மக்கள்  நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள். இதில் விதிவிலக்காக நமது போகலூர் மற்ற கிராமங்களைப் போலில்லாமல்    மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது ஊரில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் வாகனம் வழியாக பேருந்து வழியாக எந்த நேரத்திலும்  செல்ல முடியும். கிராமம் என்ற முறையில் இருந்தாலும் போக்குவரத்து முறையில் மற்ற நகரங்களுக்கு சமமாக போக்குவரத்து வசதி பெற்றுள்ளது.


நமது ஊரில் சேதுபதி மன்னரின் நினைவாக ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் ஆவலாக உள்ளது.

நமது கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார் என்று நாம் எதிர் பார்ப்போம்.


நமது நிருபர்

சாமானியன்

போகலூர்.

No comments:

Post a Comment