Wednesday, April 20, 2022

நமது பள்ளிக்கூடம்

 நமது பள்ளிக்கூடம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி. சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1938 இல் கல்வியின் மீது பற்றும் சமுதாயம் நலன் கொண்ட மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

பள்ளிக்கூடம்  கட்ட இடம் கொடுத்தவர்களுக்கு நினைவாக அவர்கள் பெயரான நூருல்லா என்ற பெயரை நமது பள்ளிக்கு நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி என்று பெயர் வரக் காரணமாக அமைந்தது.

 நமது பள்ளிக்கூடத்து பின் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்.  ராமநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யதம்மாள் உயர்நிலைப்பள்ளி  1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஹைரத்துல்  ஜமாலியா உயர்நிலைப்பள்ளி பரமக்குடி 1981 துவங்கப்பட்டது.

 நமது பள்ளிக்கூடம் ஆரம்பகாலத்தில் மண் சுவர்   கட்டடத்தில் இயங்கியது. மக்களின் தொடர் முயற்சியாலும் கடும் உழைப்பாலும் செங்கல் கற்களால்  கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள ஓட்டு கட்டடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. நமது நூருல்லா முஸ்லிம் பள்ளிக்கூடம்  மக்களின்  தொடர் முயற்சியால் காங்கிரீட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடத்திற்கு கூடிய விரைவில் மாற்றப்பட உள்ளது.

 நமது பள்ளிக்கூடத்தின் படித்த பல நூறு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேறி உள்ளனர். குறிப்பாக டாக்டர்,  இன்ஜினியர், அரசுத் துறைகள் மற்றும் பல துறைகளில் தங்களை பங்களிப்பை சிறப்பாக ஆற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சாதனையாளர்கள்  உருவாக காரணமாக இருந்தது நமது நூருல்லா முஸ்லிம்  தொடக்கப்பள்ளி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 நமது வாழ்க்கையில் பள்ளி வாழ்க்கை என்பது ஒரு இனிமையான காலம் அதில் ஆரம்பப்பள்ளி என்பது தனிச்சிறப்பு அப்படிப்பட்ட சிறப்பு சொந்தமான இருக்கக்கூடிய நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளி நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன். நாம் இன்று இருக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கு அடிப்படை காரணமாக இருந்த நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப் பள்ளிக்கு நாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்க  கடமைப்பட்டுள்ளோம்.

2013 ஆம் ஆண்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்த ஆண்டே நாம் நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பவள விழா  கொண்டாடி இருக்க  வேண்டும். என்ன காரணங்கள் நம்மை பவள விழா கொண்டாடுவதை தடுத்தது என்று ஆயிரம் கேள்விகள் எழும். நடந்தவை நல்லவையாக இருக்கட்டும். நமது நூருல்லா முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த அனைத்து முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உறுதியேற்போம்.


  நமது வீட்டை நாம் எப்படி பராமரிப்போம் அதே போன்று நமக்கு கல்வி தந்த நமது பள்ளிக்கூடத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அங்கு படித்த ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும்  கடமை என்பதை நாம் உணர வேண்டும். நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை நம் கண்முன் நிறுத்தி  பார்க்க வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு இது எனது பள்ளி எனது கடமை என்ற எண்ணத்துடன் செயல்படும் ஒவ்வொரு முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கடமையாகும்.

ஆரம்பம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ஒருவரின் ஆரம்பக்கல்வி சரியாக இருந்தால் அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே அமையும். நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் கல்வி தந்த நூருல்லா தொடக்கப் பள்ளிக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் .


நமதுநிருபர்

சாமானியன்

போகலூர்

No comments:

Post a Comment