Wednesday, April 20, 2022

பாவடி (பாவோடி)

பாவடி என்றவுடன் நமது ஊர் பெரியவர்கள் பசங்கள் எங்கே என்று கேட்டால்  பாவடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். 

 நாம் என்றாவது  பாவடி என்றால் என்ன கேள்வி கேட்டது உண்டா. அதற்கு பின்னாடி ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.  1900  காலகட்டத்திற்க்கு முன் அனைத்து  வியாபார தொழிலில்களையும் முஸ்லிம்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் நெசவுத்தொழில்.  இன்று பனியன்  ஆடை தொழிலை உலகத்துக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் அதன் முன்னோடிகள் முஸ்லிம்கள்தான். அவர்கள்தான் வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை வரவைத்து நவீன முறையில் நெசவு தொழிலை செய்து கொண்டிருப்பது  அனைவரும்  அறிந்த உண்மை.

 எழுத்தாளர் டாக்டர் S.M. கமால் எழுதிய  முஸ்லிம்களும் தமிழகமும் என்ற நூலில் நமது ஊர் போகலூர் இல் 50 தறிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நமது ஊர் முஸ்லிம்கள் நெசவுத் தொழிலை செய்தார்கள் என்ற குறிப்புகளை அடிக்கோடிட்டு எழுதியுள்ளார். அதில் எந்த ஊர்களில் பாவடி என்ற தெரு இருக்கிறதோ அந்த ஊரில் நெசவுத்தொழில் இருந்தது என்று ஆதாரமாக கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் பாவடி என்கின்ற தெருதான்.   

 பாவடி என்றால்  நூலுக்கு சாயம் இட்டு  காயவைக்கும் இடம். அந்த இடம் அகலமாகவும் ரொம்ப நீளமாகவும் இருக்கும். நாம் எமனேஸ்வரம் ஊர் சென்று இருந்தால் அங்கே சாயமிடும் காட்சிகளே நாம் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு.  நெசவு பணியில் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  அதில் ஒன்றுதான் நாம் புதிய பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி உள்ள தெரு அகலமாகவும் நீளமாகவும் உள்ளது அதற்கே தான் பாவடி தெரு நமது சிறுவயதிலிருந்து நம்முடன் தொடர்புடைய இந்த பாவடி தெருவை நாம் அதன் பழமை மாறாமல்  பாதுகாப்பது நமது கடமை.


நமது நிருபர் 

சாமானியன்

போகலூர்

No comments:

Post a Comment