சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011 14:07 அடிப்புகள்: 214
தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை தாக்கினர் என்று அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னியிலுள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பாடசாலை மாணவன் ஹமித் மாமோசாய் (15) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது குறித்துக் கூறுகையில், 20 பேர் என்னைத் தாக்கினர். அவர்கள் என்னைத் தாக்கும்போது ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள்.
இத்தாக்குதலால் சுயநினைவை இழந்த அம்மாணவனை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சகோதரனைப் பார்ப்பதற்காக வருகை தந்த அவரின் சகோதரி நாஜியா கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் எனது சகோதரனை தினமும் இம்சித்து வந்துள்ளனர். இதனால் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்றார்.
மேலும் அச்சகோதரி கருத்துத் தெரிவிக்கையில், இது குறித்து பாடசாலை தலைமை ஆசிரியருக்கு தெரியப்படுத்தியும் அவர் ஏன் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இனிமேலாவது இவ்வாறு இனத்தின் பெயரால் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கு இப்பாடசாலை நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment