சட்டி, சுட்டதடா ..... உள்நாட்டு விவகாரங்களில், அன்னிய தலையீடு கூடாது : ஐ.நா. சபையில் மன்மோகன் வலியுறுத்தல்! நியூயார்க், செப்.24: ஒரு நாட்டில், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால், அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும், ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை, சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன? என்று, வெளியிலிருந்து பரிந்துரைப்பதும், அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது. சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை, அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம், ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது, என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும், காப்பாற்றும் வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு வலியுறுத்தி பேசினார். தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்து:.......... லிபியாவில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி, அதிபர் முஅம்மர் கடாஃபிக்கு எதிரான போராளிகளை ஆதரித்து, மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தியதுபோல, இந்தியாவிலும் அத்தகைய அணுகுமுறையை, அமெரிக்கா கையாண்டுவிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான், பிரதமரின் இந்த பேச்சு அமைந்துள்ளது. இந்தியாவில், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, அதற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்தது முதலே, மன்மோகன் சிங் அரசுக்கு, அமெரிக்காவின் உள்நோக்கம் பற்றிய சந்தேகம் வந்து விட்டது, என்றனர் அதிகாரிகள். | நேற்று ஈராக், ஆப்கான்... இன்று லிபியா ... நாளை... இந்தியா விலும் உள்நாட்டு போர் : அமெரிக்கா திட்டம்! நியூயார்க், செப். 24: பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐ.நா. சபை உரை, பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளில், அமெரிக்காவும் பிரிட்டனும் நடத்திய அத்துமீறல்களின்போது, எதிர்ப்பை தெரிவிக்காத இந்தியா, இப்போது அமெரிக்காவை எதிர்க்கிறது. இதற்கு, முக்கிய பல காரணங்கள் உண்டு. ஈராக்கின் சதாம் அரசு, பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து, என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா, ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது. அடுத்து, லிபியாவில் கிளர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்து, லிபியா மீது ஒருமுகமான, தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இப்படி பல நாடுகளிலும், அடாவடிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவிற்கு, தற்போது இந்தியாவின் வளங்களை பார்த்து, கண் உறுத்துகிறது. அண்ணா ஹசாரே போன்றவர்கள், கையில் எடுத்திருக்கும் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதங்களை, ஊதி பெரிதாக்கி, நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியும், நாட்டில் ஜனநாயக முறைப்படி, தேர்தல்கள் மூலம் நடைபெற வேண்டிய ஆட்சி மாற்றங்களை- குறிப்பாக, 2014ல் தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய, பிரதமர் வேட்பாளர், போன்ற விஷயங்களை இப்போதே விவாதத்திர்க்குள்ளாக்கி வருகிறது. நரேந்திர மோடிக்கு நற்சான்று பத்திரம் வழங்கி, சங்கபரிவாரங்களை, அமெரிக்கா கொம்பு சீவி விட்டுள்ளது.உடனே தேர்தல் வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கிளர்ச்சி ஏற்படுத்தி, அமெரிக்கா தனது ராணுவத்தை இங்குள்ள மோடி வகையறாக்களுக்கு, சாதமாக களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்திய தேசத்தில், உள்நாட்டு போர் மூல செய்து, நிரந்தரமான முறையில், இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர, அமெரிக்கா முயற்சிக்கும், என்பது தான் இந்திய பிரதமரின், இந்த எதிர்ப்புக்கு காரணம் என்று, உலக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ......ஆம் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க, இப்போது போரைத் தவிர அமெரிக்காவுக்கு மாற்று வழி இல்லை. | |
Monday, September 26, 2011
maruppu news
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment