Monday, September 26, 2011

maruppu news





பாகிஸ்தானில் இந்து கோயிலைத் திறக்க நீதிமன்றம் உத்தரவு !

பெஷாவர், செப்.23:
பாகிஸ்தானில், 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கோரக்நாத் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்காக, மீண்டும் திறக்க, பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெஷாவரில், கோர் கட்ரி தொல்லியல் துறையின் வளாகத்தின் மத்தியில் உள்ள, இந்த கோயிலை பாகிஸ்தான் அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும், என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோயிலுக்கு போதுமான, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று, நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக, எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
............... - நன்றி : தினமணி.. 24/09/11

வேலூர் கோட்டை மசூதி விஷயத்தில், மனது வைக்குமா இந்திய அரசு?
வேலூர் கோட்டைக்குள், இந்து, முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோட்டைக்குள் கோயிலிலும், தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், மசூதியில் மட்டும் தொழுகைக்கு அனுமதி இல்லை.
ஔரங்கசீப் ஆட்சியின்போது, அவரது உத்தரவின் பேரில் தளபதி சந்தா சாஹிப், வேலூர் கோட்டையினுள், இந்த மசூதியை 1750ல் கட்டி முடித்தார்.
பின்னர் 1921ம் ஆண்டில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது.

அப்போதும் கூட வழிபாடு நடந்தது.
ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, துணை பிரதமர் ஆக இருந்த அத்வானியின் உத்தரவால், வேலூர் கோட்டை மசூதியை, தபால் ஆபீஸாக சித்தரித்துவிட்டனர்.
மசூதி சர்ச்சை குறித்து, தொல்லியல் துறையின் அதிகாரியான பலராமனிடம் பேசினோம்.
சர்ச்சைக்குரிய அந்த இடம், மசூதி என்று தான், எங்களது ரெக்கார்டுகளில் உள்ளது, என்றார்.



No comments:

Post a Comment