Monday, September 26, 2011

maruppu news


  • பாரத்புர் : ஆதிக்க சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை!
    ராஜஸ்தான் : செப். 19,
    ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில், முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில், கலவரம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது.
    அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ, நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
    முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில், நடந்த கலவரத்தில் போலிஸ், குஜ்ஜார்களுடன் சேர்ந்து, முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால், முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
    குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த சண்டையில், காவல்துறையும் அப்பகுதி அரசு நிர்வாகத்துறையும், முற்றிலுமாக ஒருதலைப்பட்சத்துடனும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளனர் என்பதற்கு, பல தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
    இக்கலவரம், ஈத்கா மசூதி இடம் தொடர்பாக ஆரம்பித்து, சிறுது நேரத்திற்குள் துப்பாக்கி சண்டை அளவுக்கு வளர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
    முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில், காவல்துறை, குஜ்ஜார்களுடன் இணைந்து, முஸ்லிம்களை சரமாரியாக சுட்டதுடன் மட்டுமல்லாமல், குஜ்ஜார்கள் முஸ்லிம்களை உயிருடன் எரித்து கொலைச்செய்ததை தடுக்காமல், வேடிக்கை பார்த்துள்ளனர்.
    குஜ்ஜார்களும் போலீசும், சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராக செய்துள்ள, மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு தற்போது கடுமையான முயற்சிகள், நடைபெற்று வருகின்றன.
    காவல்துறை, குஜ்ஜார்களுடன் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், நாங்கள் செய்வது அறியாது திகைத்துப் போனோம்.
    உயிர் பிழைப்பதற்காக, வேறு வழியின்றி, குளங்களில் குதித்து தப்பித்து ஓடினோம்.
    ஆனால் போலீசும் குஜ்ஜார்களும் இணைந்து, மசூதியில் இருந்தவர்களின் மீது, கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது, என்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர், உண்மையறியும் குழுவிடம் வியாழன் அன்று தெரிவித்தார்.
    ஈத்கா மசூதியின் அருகில் உள்ள கிணற்றில், முற்றிலுமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் உடல்கள் இரண்டு கிடைத்துள்ளன.
    மசூதியின் உள்ளே, அனைவரும் கடுமையாக தாக்கப் பட்டதற்கான ரத்தக் கரைகள், இருந்ததை காண முடிந்தது.
    மேலும் மசூதியின் வெளிப்புறத்தில் 15 முதல் 20 வரையிலான தோட்டாக்களின் அச்சுகள் உள்ளன.
    மசூதியில், எங்கு பார்த்தாலும் குர்ஆனின் கிழிந்த பக்கங்கள், உடைந்த கண்ணாடிகள்,சுவர்கள் மற்றும் உபரி பொருட்கள் என சிதறி கிடந்தன.

    போலீஸ் அத்துமீறலால் 8 முஸ்லிம்கள் சாவு : மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் டிஸ்மிஸ்!
    பாரத்பூர், செப்.22:
    ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் போலீஸ்காரர்களின் அத்துமீறல்களால், 8 முஸ்லிம்கள் மசூதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர், என்று உண்மை அறியும் குழு, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    விஜய் பகுகுணா, ரஷீத் ஆல்வி, விப்லவ தாக்கூர், தீபேந்தர் ஹூடா ஆகியோர் அடங்கிய குழு, பாரத்பூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த இடத்தை, திங்கள்கிழமை பார்த்து, மேலிடத்திடம் செவ்வாய்க்கிழமை அறிக்கை தந்தது.
    குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், ஈத்கா பள்ளி நிலத்தகராறு இருந்தது.
    முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையில், காங்கிரஸ் கட்சிதான் ராஜஸ்தானை ஆட்சி செய்கிறது.
    ஆட்சியர் மாற்றம்:.......
    துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தவுடன் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் கூண்டோடு மாற்றப்பட்டனர்.
    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய், மாநில அரசால் நஷ்ட ஈடாக உடனடியாகத் தரப்பட்டது.
    சி.பி.ஐ. விசாரணை:.......
    துப்பாக்கிச் சூட்டில், ஒரு சாரார் மட்டுமே கொல்லப்பட்டனர் என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தருமசங்கடம் ஏற்பட்டது.
    எனவே, சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
    முதல்வரை மாற்ற கோரிக்கை:.......
    துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான, மாநில போலீஸ் அமைச்சர் சாந்தி தாரிவாலையும், முதல்வர் அசோக் கெலோட்டையும் மாற்ற வேண்டும் என்று, ராஜஸ்தான் முஸ்லிம் பேரவைத் தலைவர், சலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    மார்க்சிஸ்ட் அறிக்கை:.......
    போலீசாருடன் நடந்த சண்டையில் தான், முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர், என்று மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழுவும், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    கெலோட்டுக்கு காங்கிரஸ் தலைமை கடும் கண்டனம்:.......
    ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், முஸ்லிம்கள் இறந்ததற்காக, மாநில முதலமைச்சர் அசோக் கெலோட்டுக்கு, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை, கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
    எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு, அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
    சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த, 8 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது, என்று தில்லியில் நிருபர்களை புதன்கிழமை சந்தித்த, கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர், அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment