Monday, September 26, 2011

maruppu news



நீதிபதி-ஜெயேந்திரர் உரையாடல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு!
சென்னை, செப்.22 (டிஎன்எஸ்) காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில், மேலாளர் சங்கரராமன் 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கு விசாரணை, புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் சங்கராச்சாரியார், ஜெயேந்திரர் உள்பட பலர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி ராமசாமியுடன், ஜெயேந்திரர், லஞ்ச பரிமாற்றம் தொடர்பாக, பேசிய தொலைபேசி உரையாடல் கேசட் வெளியானது.
இந்த உரையாடலில் பேசியது உண்மை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளரிடம், வக்கீல் சுந்தர்ராஜன் என்பவர் புகார் மனு கொடுத்திருந்தார்.
இம்மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா, சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு, இன்று (22/09/11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேச அய்யர், தன்னையும் இவ்வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்தார்.
இதற்கு, மனுதாரரின் வக்கீல் மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் நீதிபதி சுகுணா, சுந்தரேச அய்யரை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்தார்.
உயர்நீதிமன்றம் விஜிலென்ஸ் பதிவாளர் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ்குமார் வாதாடும்போது:
தொலைபேசி உரையாடல் புகார் குறித்து, விசாரிக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.
தொலைபேசி உரையாடல் புகார் குறித்த விசாரணை, 2 அல்லது 3 வாரத்தில் முடிவடையும் என்று, விஜிலென்ஸ் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி சுகுணா வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயேந்திரர் : நரேந்திர மோடி வழியில் உண்ணாவிரத திட்டம்!
காஞ்சீபுரம்: செப். 22 , வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன், 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான, அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார்.
ஜெயேந்திரும், விஜயேந்திரரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, நீதிபதி ராமசாமியுடன், ஜெயேந்திரர் மற்றும் சிலர் தொலைபேசியில் உரையாடும், ஆடியோ சி.டியை தாக்கல் செய்து, நீதிபதிக்கு ரேட் பேசும் விசயத்தை, வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர், வெளியே கொண்டு வந்தார்.
அந்த ஆடியோ மேட்டரில், கௌரி எனும் பாப்பாத்தியம்மாள், பார்ப்பன மொழியில், பார்ப்பன மேலாண்மையோடு, உரையாடலை ஒருங்கிணைக்க, கான்பிரன்ஸ் காலில் ஜெயேந்திரர் ‘அருள்’வாக்கு ஓதுகிறார்.
எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் அனுப்பி விடுவதாக, மீண்டும் மீண்டும் கூறுகிறார்.
நீதிபதியோ, நமஸ்காரத்தை சொல்லி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதால்தான், இந்த அவசரம் என்று வழிய, ஜெயேந்திரர், அதெல்லாம் பிரச்சினை இல்லை.
கடன் வாங்கியாவது? உடன் அனுப்புவதாக வாக்களிக்க, பின்னர் அந்த கௌரி,....
பெரியவாளே சொல்லியாச்சு, இனியாச்சும் நம்பி ஆகிற வேலையை பாருங்கோ, என்பது போல முடித்து வைக்கிறார்......
ஆதிக்க சக்திகளின் புதிய யுக்தி:
காவி பயங்கரவாதிகள், வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, தற்போது, பிரச்சினைகளை திசை திருப்பும் புதிய முறையாக, உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்.
நரேந்திர மோடியை பின்பற்றி, ஜெயேந்திரரும் மாபெரும் உண்ணாவிரத திட்டம் வகுக்கிறார்.
மேற்படி உண்ணாவிரதத்திற்கு, என்ன பெயரிடலாம், எங்கு மேடை அமைக்கலாம், தமிழகத்தில் வைக்கலாமா?......
அல்லது, வட மாநிலங்களில், காவிகளுக்கு செல்வாக்கு நிறைந்த பகுதியில், வைத்து கொள்ளலாமா?
..... என தீவிர ஆலோசனையில், காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஈடுபட்டுள்ளார்.


No comments:

Post a Comment