Wednesday, December 14, 2011

பாரத்பூர் கலவர வழக்கு – 13 பேரை கைது செய்தது சிபிஐ

gopalgar
புதுடில்லி:கடந்த செப்டம்பரில் 10 பேர் கொல்லப்பட்டு 40 பேர் படுகாயமடைந்த பாரத்பூர் கலவர வழக்கில் 13 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் கோபால்கர் எனும் இடத்தில் ஜமா மஸ்ஜித் பகுதியில் உள்ள ஈத்கா இடப்பிரச்சனை தொடர்பாக முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் நடைபெற்ற பிரச்சனை கலவரமாக வெடித்தது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கலவரக்காரர்களின் தாக்குதல் மற்றும் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் 10 பேர் கொல்லப்பட்டனர் 40 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்வழக்கை ராஜஸ்தான் அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இக்கலவரத்திற்கு மாநில அரசே பொறுப்பு என்று தேசிய சிறுபான்மையினர் கமிஷன் கூறியுள்ளது.

No comments:

Post a Comment