Wednesday, December 14, 2011

சவுதி அரேபியா: பில்லி சூன்யம் செய்த பெண்ணுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை.


சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த் அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து வந்தார். இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சவுதிஅரேபியாவில் மாந்திரீகத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமீனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீனாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தக வலை சவுதி அரேபியாவின் உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் கணவரை தீவைத்து எரித்து கொன்ற ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் இது வரை 73 பேருக்கு தலையை கொய்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment