Monday, December 19, 2011

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை


IN18_MAYAWATI_867654f










லக்னோ:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு தனது கட்சியும், அரசும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் மாயாவதியின் இவ்வறிக்கை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் வகையில் ஒ.பி.சி(இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) ஒதுக்கீட்டின் 27 சதவீதத்தை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என மாயாவதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் பேரணியில் உரை நிகழ்த்தினார் அவர்.
அப்பொழுது அவர் கூறியதாவது: “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதற்கு தேசிய கொள்கையை வகுக்கவேண்டும். இதனை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் அரசு இதுவரை முஸ்லிம்களை ஏமாற்றியது. அவர்களின் நலனுக்காக எதுவும் செய்யாத காங்கிரஸ் அவர்களை வாக்குவங்கியாகவே கருதுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஏராளமான கலவரங்களுக்கு தேசம் சாட்சியம் வகித்தது. 40 வருடங்களாக உ.பி மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது முஸ்லிம்கள் பீதியுடன் வாழ்ந்தனர்.
பா.ஜ.க, வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் போன்ற சங்க்பரிவார அமைப்புகளுடன் காங்கிரஸ் கட்சி மிருதுவான போக்கை
கையாண்டதுதான் 1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானது. இது முஸ்லிம்களிடையே தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்கியபொழுது இதர கட்சிகள் இக்காரியத்தில் முஸ்லிம்களை புறக்கணித்தனர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நாட்டில் கலவரங்களும், தாக்குதல்களும் அதிகரிக்க காரணமானது என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் கூறியதை சுட்டிக்காட்டிய மாயாவதி தனது ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் நிகழவில்லை என கூறினார்.
தீவிரவாதத்துடன் முஸ்லிம்களை தேவையில்லாமல் தொடர்பு படுத்தும் போக்கை கண்டித்தார் மாயாவதி. தீவிரவாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதம் இல்லை.தீவிரவாதம் உருவாக அடிப்படையான காரணங்களை குறித்து ஆராயவேண்டும். முஸ்லிம்களின் நலனுக்காக பல்வேறு நிதிகளை மத்திய அரசு குறிப்பிட்ட காலத்தில் வழங்காமல் நஷ்டப்படுத்தியது என மாயாவதி குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment