பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன விடுதலை அமைப்புக் கூட்டமைப்பில் (PLO) இணைந்து செயல்பட ஹமாஸ் முடிவெடுத்துள்ளது.
பாலஸ்தீனத் தலைவர் யாஸர் அரபாத் அமைத்த பி.எல்.ஓ. அமைப்பும் ஹமாஸும் எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டது. இஸ்ரேலுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவில் ஆட்சி செய்து வருகிறது. பாலஸ்தீன விடுதலை அமைப்பில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் பதா அமைப்பு மேற்குக்கரையில் அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது.
தற்போது ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு வசதியாக அந்த அமைப்பில் தன்னையும் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இவ்வாறு சேர்வதன் மூலம் பி.எல்.ஓ. தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் தங்களுடன் கலந்தாலோசனை செய்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஹமாஸின் பொலிட்பீரோ தலைவர் காலித் மிஷ்ஹால் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழன் அன்று காலித் மிஷ்ஹால் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்த பிறகு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சந்திப்பில் இஸ்லாமிக் ஜிஹாத், டெமாக்ரடிக் பிரண்ட் பார் தி லிபரேசன ஆப் பாலஸ்தீன் ( DFLP) மற்றும் பாப்புலர் பிரண்ட் பார் தி லிபரேசன் ஆப் பாலஸ்தீன் (PFLP) ஆகிய அமைப்பினைச் சார்ந்த மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அமைதியாக எதிர்க்க வேண்டுமே தவிர தீவிரவாதத்தை பின்பற்றக் கூடாது என ஹமாஸ் அமைப்பை ஏற்றுக் கொள்ள வைத்ததாக அப்பாஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீன அதிகார சபையில் இனி ஹமாஸும் பங்கு பெறும் என்றும் இஸ்லாமிக் ஜிஹாத் என்ற அமைப்பும் விரைவில் இதில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பாலஸ்தீன விடுதலை அமைப்பு முயற்சி செய்து வருகிறது. இதற்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. தனி நாட்டுக் கோரிக்கைக்கு 112 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more about பாலஸ்தீனத்தில் திருப்பம் - பீ.எல்.ஓ. உடன் இணைந்து செயல்பட ஹமாஸ் முடிவு at www.inneram.கம
நன்றி இந்தநேரம்.காம்
No comments:
Post a Comment