Tuesday, January 10, 2012

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் இஸ்ரேல்


ஜெருசலம்:இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட்டை 700 மில்லியன் டாலர் கூடுதலாக உயர்த்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பாதுகாப்பு பட்ஜெட்டை வெட்டிக் குறைப்பதாக கடந்த ஆண்டு நெதன்யாகு அறிவித்திருந்தார். பொருளாதார சீர்திருத்தம் கோரி இஸ்ரேலில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தவேளையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் பட்ஜெட்டை குறைப்பது எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை உருவாக்கும் என நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார். பிராந்தியத்தில் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும் பட்ஜெட் தொகை அத்தியாவசியமானது என நெதன்யாகு கூறினார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment