Saturday, 04 February 2012 09:29 maruppu மீடியா - தினமணி
மும்பை: பிப்ரவரி 4, ரூ 25,000/- லஞ்சம் கொடுக்காவிட்டால், உன்னை பயங்கரவாதியாக அறிவித்து விடுவேன், என்று மிரட்டிய போலீஸ் எஸ்.ஐ., யின் மிரட்டல், கேமராவில் பதிவு செய்து, மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.
இது பற்றிய விபரமாவது: மும்பை புறநகர் பகுதியான பாயிதொனி, சரக காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சினாபு என்பவர், டோங்கிரியை சேர்ந்த டாக்டர் பைஜான் கான் என்பவரை, தீவிரவாத செயல் மற்றும் கள்ள நோட்டு வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், டாக்டர் பைஜான் கான் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களில் 2 நோட்டுக்கள், கள்ள நோட்டு இருப்பதாக விசாரிக்கப்பட்டார். சம்பவம் நடந்து 9 மாத காலத்தில், அவர் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதற்கிடையில், முந்தய விசாரணையை பயன்படுத்தி, தற்போது உடனே ரூ 25,000 லஞ்சமாக கொடுக்க மறுத்தால், உன் மீது கள்ள நோட்டு வழக்கு தொடுப்பதுடன், உன்னை பயங்கரவாதியாகவும் அறிவித்து விடுவேன், என்று சப் இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார்.
லஞ்ச உரையாடல், மற்றும் மிரட்டல் சம்பவம் முழுவதையும், டாக்டர் பைஜான் கான் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து, மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி சப் இன்ஸ்பெக்டர் சினாபு விடம் கேட்ட போது, பைஜான் கான் சம்மந்த்தப்பட்ட விசாரணையை தான் மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 2 மாதங்களாக பைஜான் தன்னை சந்திக்க முயற்சித்ததால், நான் காவல் நிலையத்தில் வைத்து அவரை சந்தித்தேன். அப்போது, அவராக முன்வந்து லஞ்சம் தொடர்பாக என்னுடன் பேச்சை கொடுத்து, கேமரா மூலம் பதிவு செய்துள்ளார் என்றார்.
No comments:
Post a Comment