Monday, February 27, 2012

துருக்கி மேலாக பறக்கும் இஸ்ரேலிய விமானங்கள் வெடிக்குமா?


இஸ்ரேலிய கார்கோ விமானங்கள் தமது நாட்டு வான்பரப்பை உபயோகிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளது துருக்கி. இஸ்ரேலிய கார்கோ விமானங்களில் அபாயகரமான பொருட்கள் (dangerous materials) ஏற்றிச் செல்வதால், தமது வான் பரப்பை உபயோகிப்பதை தடை செய்வதாக காரணம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் இந்தத் தடை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல், இஸ்ரேலிய விமான நிறுவனங்களான எல்-அல் இஸ்ரேலி ஏர்லைன்ஸ், மற்றும் சி.ஏ.எல். கார்கோ ஏர்வேஸ் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது.


இந்த இரு நிறுவனங்களின் விமானங்களும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும்போது, அதை 10 நாட்களுக்கு முன்னரே தமக்கு தெரிவித்தால், அனுமதி கொடுப்பதா, இல்லையா என்று கேஸ்-பை-கேஸ் அடிப்படையில் முடிவு செய்ய தயாராக இருப்பதாகவும் துருக்கி கூறியுள்ளது.

10 நாட்களுக்கு முன்னரே தமது விமானத்தில் ஏற்றப்படவுள்ள கார்கோ எத்தகையது என்பதை, எந்த விமான நிறுவனத்தாலும் 100 சதவீதம் சரியாக சொல்ல முடியாது. எனவே, இஸ்ரேலிய விமானங்கள் துருக்கி ஏர்-ஸ்பேஸை மறந்துவிட வேண்டியதுதான்.

இதிலுள்ள பெரிய பாதிப்பு, பொருளாதார ரீதியானதுதான். இஸ்ரேலில் இருந்து புறப்படும் விமானங்களில் 70 சதவீதமானவை துருக்கி ஏர்-ஸ்பேஸ் ஊடாக பறக்கத் தொடங்கியே தமது பயணத்தை தொடர்வது வழக்கம். காரணம், அதுதான் குறுகிய விமானப் பாதை. இப்போது, துருக்கி தடையை அறிவித்திருப்பதால், இஸ்ரேலிய விமானங்கள் துருக்கியைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அதிக எரிபொருள், மற்றும் அதிக பயண நேரம் எடுக்கும்.

இதில் இஸ்ரேலிய விமான நிறுவனங்களுக்கு உள்ள பெரிய சோகம் என்னவென்றால், சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் dangerous materials என்று குறிப்பிடுவது, கண்டிப்பாக துப்பாக்கிகளாகவோ, யுத்தம் தொடர்பான விவகாரங்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏவியேஷன் டர்மினாலஜியில் பேட்டரியும் dangerous material, பர்ஃபியூமும் dangerous material!

அதே நேரத்தில் மற்றொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். மொசாத் ஆயுதங்களை அங்கும் இங்குமாக கடத்தும்போது, இஸ்ரேலிய விமானப்படை விமானங்களை பயன்படுத்துவதில்லை. சிவில் விமான நிறுவனங்களின் கார்கோ ஹோல்டில்தான் மொசாத்தின் ஆயுதங்கள் சந்தேகம் ஏற்படாத வகையில் அனுப்புவது வழக்கம்.

இருந்து பாருங்கள், இஸ்ரேல் இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடம் உதவி கேட்டு போய் நிற்கப்போகிறது. (அமெரிக்காவுக்கு துருக்கியுடன் ‘வேறு விதமான’ சில ராணுவ டீல்கள் உள்ளன)

நன்றி விறுவிறுப்பு 

No comments:

Post a Comment