புது டெல்லி: பிப்ரவரி 13, நேற்று பிற்பகல் தெற்கு டெல்லியில், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் மகாராஷ்டிரா, A.T.S. படை பிரிவை சேர்ந்த, சாதாரண உடை அணிந்த 3 போலீசார், போலி சம்மன்களை வைத்துக் கொண்டு, முஹம்மது தகீ, என்ற வாலிபரை கைது செய்ய முயன்றனர்.
அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களின் விழிப்புணர்வு காரணமாக, போலீசின் சதி முறியடிக்கப்பட்டதுடன், உள்ளூர் போலீஸ் துணையுடன் போலி சம்மன்களுடன் அப்பாவியை குறிவைத்த, மகாராஷ்டிரா போலீசார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ......இதே போல மற்றொரு போலீஸ் அத்து மீறலும் நேற்று முறியடிக்கப்பட்டது. இதன் மூலம் 2 அப்பாவி முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டனர். இது பற்றிய செய்தியாவது: புது டெல்லியை சேர்ந்தவர்கள் ஷாருக் (18), முஹம்மது அஷ்பாக் (26) இவர்கள் இருவரும், அதே பகுதியில் 2 சக்கர மெக்கானிக் கடை வைத்து, தொழில் செய்து வருகின்றனர். நேற்று பகல் 11.30 மணியளவில், இவர்களின் "ஷெட்டுக்கு" சாதாரண உடையில் வந்த "டெல்லி போலீஸ்" இவர்கள், திருட்டு வாகனத்தை வாங்கியதாக பொய் குற்றம் சுமத்தி, வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயற்ச்சித்தனர். சம்பவ இடத்தில் குழுமி விட்ட முஸ்லிம்கள், உள்ளூர் எம்.எல்.ஏ, மற்றும் கவுன்சிலர் துணையுடன், மேற்படி கைது முயற்ச்சியை முறியடித்தனர். விசாரணையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான், ஒருவர் பழுது பார்க்க வாகனத்தை விட்டு சென்றது தெரிய வந்தது. பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்ய முயன்ற, போலீசார் மீது புகாரும் பதிவு செய்யப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட, சமூக சேவகர் டாக்டர் இல்யாஸ் குறிப்பிடும் போது, சமீப காலமாக முஸ்லிம் வாலிபர்களை குறி வைத்து, ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்து விட்டு, பிறகு குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத குற்ற வழக்குகளிலும் இணைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்கும் முயற்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர். இதை அரசுகள் தான் தடுக்க வேண்டும், மேலும் முஸ்லிம்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
நன்றி maruppu
No comments:
Post a Comment