Thursday, February 23, 2012

இன ரீதியான பாகுபாடு: இந்திய மருத்துவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு

an doctors win racial discrimination case in US
ஹூஸ்டன்:அமெரிக்காவில் இனரீதியான அவமதிப்பை சந்தித்த இந்திய மருத்துவர்களுக்கு டெக்ஸாஸ் நீதிமன்றம் ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் மெடிக்கல் சென்டர் சி.இ.ஒ, இந்திய மருத்துவர்களை 2-ம் தர குடிமக்களாக நடத்தியதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது.
இந்திய மருத்துவர்களான அஜய் கால்லா, ஹரீஷ் சாந்த்னா, தக்ஷேஸ் பாரிக் ஆகியோர் இவ்வழக்கை தொடர்ந்தனர். இவ்வழக்கில் நீதிமன்றம் இந்திய மருத்துவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
மெடிக்கல் சென்டருடன் ஒப்பந்தம் செய்த இதய நோய் நிபுணர்கள் மட்டுமே கார்டியாலஜி பிரிவில் பணியாற்ற முடியும் என்று விக்டோரியாவில் சிட்டிசன்ஸ் மெடிக்கல் சென்டர் உத்தரவிட்டிருந்தது. தங்களுடைய திறமைகளையோ, குணநலன்களையோ பரிசீலிக்காமல் பொருளாதார – இன அடிப்படையில் மெடிக்கல் சென்டர் முடிவு எடுத்துள்ளது என்று இந்திய மருத்துவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த உத்தரவின் காரணமாக இவர்களை சந்திக்க வருபவர்களுக்கு பெரிய அளவிலான சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment