Sunday, February 19, 2012

மத்தியபிரதேசம் – குடும்பத்தினருடன் பத்திரிக்கையாளர் கொலை


murder

போபால்:மத்திய பிரதேசம் மாநிலத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பத்திரிக்கையாளர் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.


சந்திரிகா ராய்(42 ) என்னும் பாதிரிக்கையாளர் அவரின் மனைவி துர்கா ராய்(40 ), மகன் ஜலாஜ்(வயது 19 ) மற்றும் மகள் நிஷா (14 ) ஆகியோர் அவர்களின் வீட்டு அறைகளில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
சந்திரிகா ராய் நைபாரத் மற்றும் ஹிதாவத் ஆகிய நாழிதல்களில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

ராயின் வீடு நேற்று முழுவதும் வெளியிலிருந்து பூட்டப்பட்டு இருந்துள்ளதை அடுத்து ராயின் சகோதரன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் ஆனால் கடந்த பிப்ரவரி 17  அன்று கொலை நடந்துள்ளதாகவும் மற்றும் கொலையாளி ராயின் குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது காவல்துறை. மேலும் கொலையுண்டவர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி காவல்துறை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment