நமது ஊரில் 1980 களுக்கு முன் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது. 1980களில் நமது மக்களின் கல்வி என்று பார்த்தால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு இதற்கு இடைப்பட்ட பகுதியில் இடைநிறுத்தம் ஆக இருந்தது. ஒரு சிலரே மட்டுமே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளநிலை பட்டம் கல்வி பயின்றார்கள் . இன்றைக்கு வெளிநாட்டு வேலை என்றால் நமது நினைவுக்கு வருவது துபாய் தான். அதேபோன்று அந்த காலகட்டத்தில் கல்வியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் ஆந்திராவுக்கு சென்று மளிகைக்கடையில் வேலை செய்தார்கள்.
1990 பின் கல்வியில் இடைநிறுத்த செய்யப்பட்ட மாணவர்கள் ராமநாதபுரம் கடைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். 1990களில் படித்த மாணவர்கள் டிப்ளோமா, ஐடிஐ போன்ற தொழில் கல்வி பயின்றார்கள். தொழில் கல்வியின் பயனாக வெளிநாடு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.
சமூகத்தில் பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம் 2000 பின் மாணவர்களின் கல்வித்தரம் டிகிரி என்ற அளவுக்கு உயர்ந்தது. என்னதான் இளநிலை பட்டம் படித்தாலும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. தற்போது நமது ஊர் இளைஞர்கள் அரசு வேலையில் பணிபுரிய தூங்கி விட்டார்கள். குறிப்பாக காவல் துறை மற்றும் அரசு துறைகளில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அதைத் தவிர்த்து விட்டு வெளிநாட்டு வேலை போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் நாம் அதிகமாக வேலை செய்யும் துபாய், சவுதி போன்ற நாடுகளில் ஏதாவது உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் நமக்கு வேலை இழக்க நேரிடும் இங்கே வந்து நாம் வேலையை தேடுவோம் என்றால் நமக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காது. இந்த சூழ்நிலை வரக்கூடிய தலைமுறைகளுக்கு ஏற்படாமல் இருக்க நமது பிள்ளைகளுக்கு குறைந்தது டிகிரி முடித்தபின் இரண்டு ஆண்டுகளாவது அரசு வேலைக்கு முயற்சி செய்ய உறுதுணையாக பெற்றோர் இருக்க வேண்டும்.
மாற்றம் ஒன்றே மாறாதது அது நமக்காக இருக்கட்டும். நமது சமூகத்தின் முன்னேற்றம் ஒரு பகுதியாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளது. அதனை செயல்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
நமது நிருபர்
சாமானியன்
போகலூர்