Monday, December 19, 2011

2011 க்கான டைம் சஞ்சிகையின் நாயகனாக ‘அறபு முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்‘ தெரிவு









டைம் சஞ்சிகை வருடாந்தம் நாயகர்களைத் தெரிவு செய்து வருகிறது. இவ்வருட நாயகராக (Man of the year) அறபு இஸ்லாமிய உலகின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எல்லா ஆர்ப்பாட்டக்காரர்களையும் பன்மையில் குறிப்பிடாமல், ஆர்ப்பாட்டக்காரர் என ஒருமையில் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆர்ப்பாட்டக்காரரையும் தனித்தனியே குறித்துச் சொல்வதே இதன் நோக்கம்.
ஏற்கனவே டைம் சஞ்சிகையின் வாசகர்கள் துருக்கிப் பிரதமர் அர்துகானை பிரபல்யம் மிக்க நபர் எனவும், மறுதலையாக பிரபல்யம் குறைந்த நபர் எனவும் தெரிவுசெய்திருந்தனர். எனினும், தற்போது அந்த சஞ்சிகை அறபு முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரரையே இறுதி சுற்றில் தேர்வு செய்துள்ளது.
2011 இல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது பிரச்சினைகளை வெளியிட்டு விட்டு, மௌனமாக இருக்கவில்லை. அவர்களது இயக்கம் சர்வாதிகாரிகளை வீழ்த்தியது. அதன் மூலம் உலகையே மாற்றியமைத்தது என அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூனிஸியாவில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பல இடங்களிலும் பரவியதை அது சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், பேஸ்புக், டுவிட்டர் போன்றதை இதில் ஆற்றிய பிரதான பங்கையும் கோடி காட்டியுள்ளது.
நன்றி http://meelparvai.net

No comments:

Post a Comment