எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, நேற்றும் இன்றும் நடைபெற்று வருகின்றது. முடிவுகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டத்தில் முன்னணி வகித்த சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி, இரண்டாம் கட்டத்திலும் அதிக வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் பிரதித் தலைவர் இஸாம் அல் இர்யான் ஜீஸா மாகாணத்தில் போட்டியிடுகிறார்.
இரண்டாம் நிலைக்கு வந்த ஸலபி அந்-நூர் கட்சி தொடர்ந்தும் பெருமளவு வாக்குகளைப் பெறுமா என்பதை இந்தக் கட்ட வாக்குப்பதிவுதான் தீர்மானிக்கும்.
மதச்சார்பற்ற சக்திகள் தினமும் தம்மிடையே கூடி தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகளின் பலத்தைக் குறைப்பது எவ்வாறு என்பதே இவர்களது பிரதான பேசுபொருளாக அமைந்துள்ளது.
சில இடங்களில் பொது வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பாகவும் இவர்கள் பேசியுள்ளனர். ஆயினும், இவர்களது தந்திரோபாயம் காலதாமதமாகிவிட்டது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி http://meelparvai.net
No comments:
Post a Comment