Wednesday, December 28, 2011

குஜராத் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஸதாஃபியாவிடம் விசாரணை

Former Gujarat Minister Gordhan Zadafia
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கோர்தன் ஸதாஃபியாவிடம் வழக்கை விசாரித்து வரும் நானாவதி கமிஷன் விசாரணை நடத்தியது.
நீதிபதியின் தனி அறையில் வைத்து நடத்தப்பட்ட விசாரணை 2 மணிநேரம் நீண்டது.குஜராத் இனப்படுகொலை நடக்கும் வேளையில் ஸதாஃபியா உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். இவ்விசாரணையின் போது கமிஷன் சேர்மன்
நானாவதி மற்றும் விசாரணைக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாகவே தான் இங்கு வருகைத் தந்ததாகவும், தொடர்ந்து கமிஷனுடன் ஒத்துழைப்பேன் என ஸதாஃபியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குஜராத் இனப் படுகொலையில் மோடியின் பங்கை நிரூபிக்கும் ஆதாரங்களை ஏற்கனவே ஸதாஃபியா விசாரணை குழுவிடம் அளித்திருந்தார். இதுத்தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸதாஃபியா, ’யாரையும் பாதுகாக்கவோ, யாரையும் குற்றம் கூறவோ நான் தயார் இல்லை’ என தெரிவித்தார்.
ஸதாஃபியாவை மீண்டும் ஜனவரி 1-ஆம் தேதி விசாரணைச் செய்வார்கள். குஜராத் இனப்படுகொலை வழக்கில் விரைவில் மோடியும் விசாரணைச் செய்யப்படுவார் என கருதப்படுகிறது. இதனை பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றும் ஜனசங்கர்ஷ் மஞ்சின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக செயல்பட்ட ஸதாஃபியா, பின்னர் மோடிக்கு எதிராக திரும்பினார். மோடி நடத்திய நிலமோசடி தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரி ஸதாஃபியா குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். மகா குஜராத் ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார் ஸதாஃபியா.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment