Wednesday, December 28, 2011

இஸ்ரேல் தீவிர யூதமத பழமைவாதிகளும், போலீசாரும் மோதல்

53bybadhqcwec8n
டெல்அவீவ்:ஆண்-பெண் இடையே வேறுபாடு கோரி இஸ்ரேல் நகரமான பைத் ஷெமிஷில் தீவிர யூதமத பழமைவாதிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் கைது செய்துள்ளது.
இந்நகரத்தில் ஆண்-பெண் இடையே வேறுபாடு ஏற்படுத்தக்கோரி பல மாதங்களாக மோதல் சூழல் நிலவிவருகிறது. இதன் உச்சக்கட்டமாக இம்மோதல் நிகழ்ந்துள்ளது.
தீவிர யூதமத பழமைவாதிகள் பெண்களின் நவீன உடை கலாச்சாரத்திற்கு எதிராகவும், ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிராகவும் வலுவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் குழந்தைகளும், பெண்களும் வெளியே இறங்கமுடியாத சூழல் நிலவுகிறது. யூத பழமைவாதிகளின் மிரட்டலை புறக்கணித்து வெளியே இறங்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக செய்தி வெளியிட்ட உள்ளூர் சேனல் ரிப்போர்ட்டர் நேற்று முன்தினம் தாக்கப்பட்டார். யூத வழிப்பாட்டுத் தலத்தில் நுழைய பெண்களுக்கு தடை விதிக்கவேண்டும் என கோரும் தட்டிகளை போலீசார் சாலை அருகில் இருந்து அப்புறப்படுத்தியது மோதலுக்கு காரணமானது.
பேருந்துகளில் அண்மையில் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment