Tuesday, December 13, 2011

அமெரிக்க உளவு விமானத்தை பரிசோதிக்கும் ஈரான் பொறியாளர்கள்- நவீன் உளவு விமானம் தயாரிக்க திட்டம்!

US drone
டெஹ்ரான்:சுட்டு வீழ்த்திய அமெரிக்க ஆளில்லா விமானத்தின்(ட்ரோன்) தொழில்நுட்பத்தை குறித்து அறிய ஈரான் பொறியாளர்கள் விமானத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆய்வு செய்துவருகின்றனர். அமெரிக்க ட்ரோனை விட நவீன தொழில்நுட்ப உளவு விமானத்தை தயாரிப்பதற்காக இவ்வாறு ஆய்வு நடத்துவதாக ஈரானின் பாராளுமன்ற வெளிநாட்டு கொள்கை உருவாக்க குழுவின் தலைவர் பர்வேஸ் ஸுரூரி கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் விரைவிலேயே அமெரிக்க உளவு விமானத்தை விட சிறந்த விமானத்தை தொழில்ரீதியாக ஈரான் பொறியாளர்களால் உருவாக்க முடியும் என பர்வேஸ் ஸுருரி நம்பிக்கை தெரிவித்தார்.
இம்மாதம்4-ஆம் தேதி கிழக்கு ஈரானின் வான் எல்லையை மீறிய அமெரிக்காவின் நவீன உளவு விமானமான ஆர்.க்யூ-170 என்ற விமானத்தை ஈரான் தந்திரமாக சுட்டு வீழ்த்தி தரை இறக்கியது. உளவு விமானத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கமாட்டோம் என ஈரான் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.
நன்றி http://www.thoothuonline.

No comments:

Post a Comment