13 Dec 2011
சென்ன:வக்ஃபு வாரியத்திற்கு வழங்கி வந்த வருட மானியத் தொகை, உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் அதற்கான பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி உத்திரவிட்டுள்ள தமிழக அரசை SDPI பாராட்டியுள்ளது.
இதுகுறித்து SDPI யின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளதாவது; “தமிழக அரசு, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு வழங்கி வந்த வருட மானியத் தொகையை ரூ. 45 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தியும், உலமாக்கள் ஓய்வூதியத்தை ரூ. 750 லிருந்து ரூ.1000 உயர்த்தியும், அதற்கான பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியும் உத்திரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்.
அதே சமயம் வக்ஃபு வாரியத் தலைவரை உடனடியாக நியமித்து வக்ஃபு வாரிய பணிகள் துரிதமாக நடைபெற ஆவண செய்வதோடு, வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து அதை முறைப்படுத்தி அது முழுவதுமாக முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பயன்பட ஆவண செய்திட வேண்டும் எனவும், முந்தைய தமிழக அரசு உருவாக்கிய உலமா நலவாரியத்திற்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி, நலிந்து போயுள்ள உலமாக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் சீரிய திட்டங்களை செயல்படுத்தும் வாரியமாக அதை மாற்றிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
நன்றிhttp://www.thoothuonline.com
No comments:
Post a Comment