கெய்ரோ:எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என அரசு எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்து கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்தில் நடைபெறும் பொதுத் தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறது என எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க தூதரை எகிப்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவிடமிருந்து பொருளாதார உதவி பெற்றுவரும் ஏராளமான அரசுசாரா அமைப்புகளின் அலுவலகங்களை அண்மையில் எகிப்து போலீஸ் சோதனையிட்டது. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளை எக்காரணத்தாலும் தலையிட அனுமதிக்கமாட்டோம் என ராணுவ அரசு அறிவித்திருந்தது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment