Thursday, January 19, 2012

இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி எகிப்திய தேர்தலில் அமோக வெற்றி


புதன்கிழமை, 18 ஜனவரி 2012 15:02
வாசிப்புக்கள்: 144
பகுதி: செய்திகள் - 
உலக செய்திகள்

  • PDF
Muslim brotherhood
எகிப்தின் பாராளுமன்றத் தேர்தல் ஏறத்தாழ ஒன்றரை மாத காலமாக இடம்பெற்று,ஒருவழியாக இப்போது அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கடைசி நேரத்தில் கூட மறுவாக்குப் பதிவு இடம்பெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் பின்னர்மேன்முறையீடு காரணமாகவே இந்த புதிய இழுபறி ஏற்பட்டது.

சிக்கலான தேர்தல் முறை காரணமாகஇறுதி முடிவுகளை அறிவிப்பதில் அனாவசியமான காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும்பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இம்மாதம் 23 ஆம் திகதி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அமர்வு மார்ச் மாதம் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Muslim brotherhood3
இப்போது நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில்இஹ்வான்களது அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றியீட்டியுள்ளது. இதுவரை 222ஆசனங்களை தமது கட்சி பெற்றுள்ளதாகவும்,இன்னும் 18 ஆசனங்களுக்கான முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கலாநிதி முஹம்மத் ஸஅத் அலைவா தெரிவித்துள்ளார். இவர் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தேர்தல் மையத்தின் தலைவராக உள்ளார்.

498 ஆசனங்களில் தாம் 46% மான ஆசனங்களை வென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 11 கட்சிகள் அடங்கிய ஜனநாயகக் கூட்டணியில் (Democratic Alliance - DA) அங்கம் வகிக்கிறது.
எகிப்திய பாராளுமன்றத்தில் மொத்தமாக 508 ஆசனங்கள் உள்ளன. இதில் 498 ஆசனங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டன. மிகுதியாக உள்ள 10 ஆசனங்களை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும். ஜனாதிபதி இல்லாத சூழ் நிலையில்அந்த அதிகாரத்தை தற்போது கொண்டுள்ள ஆளும் இராணுவ உயர் சபையே இந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் ஸலபிக்களின் அந்நூர் கட்சி அண்ணளவாக 25% மான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது மூன்று கட்சிகளின் கூட்டமைப்பாகும். எகிப்தின் பழம்பெரும் அரசியல் கட்சியான தாராளவாதப் போக்குள்ள வப்த் கட்சி 9% மான ஆசனங்களைப் பெற்று மூன்றாவது நிலையில் உள்ளது. இஹ்வான்களை கடுமையாக எதிர்த்த மதச்சார்பற்ற எகிப்திய கூட்டமைப்பு நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Muslim brotherhood2
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சிஅந்நூர் கட்சி,ஜமாஆ இஸ்லாமியா இயக்கத்தின் கட்டியெழுப்பல் மற்றும் சீர்திருத்தக் கட்சிஇஹ்வான்களிலிருந்து1990 களின் மத்தியில் பிரிந்து சென்றோர் உருவாக்கிய வஸத் கட்சி ஆகியன இஸ்லாமியப் போக்கைப் பிரதிபலிக்கும் கட்சிகளாகும்.

இவை அனைத்தும் பெற்றுள்ள ஆசனங்களை தொகுத்து நோக்கினால் 75 வீதமான ஆசனங்களை இஸ்லாமியவாதிகளே வென்றுள்ளனர். இது மூன்றில் இரண்டு பங்கை விடவும் அதிகமான தொகையாகும். இஸ்லாமியவாதிகளின் இந்த அமோக வெற்றிஅந்நாட்டின் மதச் சார்பற்ற சக்திகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment