14 Feb 2012
லக்னோ:உ.பி. மாநில சட்ட சபை தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் குறித்த கருத்தை நீக்க பா.ஜ.கவுக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் கமிஷனுக்கு சன்னியாசிகளின் கூட்டமைப்பான ஸந்த் மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை முன்வைத்து மெமோரெண்டம்(கடிதம்)ஒன்றை தேர்தல் கமிஷனுக்கு மகாசபை அனுப்பியுள்ளது. தீர்மானம் எடுக்காவிட்டால் மரணம் வரை தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு இன்று முதல் சன்னியாசிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் குறித்த கருத்தை நீக்க பா.ஜ.க தயாராகவிட்டால், அவர்களது தேர்தல் அறிக்கையையே ரத்துச் செய்யவேண்டும். ராமஜென்ம பூமி விவகாரத்தை அரசியல் மயமாக்க அனுமதிக்க கூடாது என்று சன்னியாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உ.பியில் ஆட்சிக்கு வந்தால் பாப்ரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment