Tuesday, February 28, 2012

கிழக்கு ஜெருசலத்தில் யூத மயமாக்கல்: ஐ.நா விசாரிக்க கத்தர் கோரிக்கை!

Sheikh Hamad bin Khalifa
தோஹா:கிழக்கு ஜெருசலத்தை யூத மயமாக்குவதை குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்று கத்தர் கோரிக்கை விடுத்துள்ளது. கத்தர் நாட்டின் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

கிழக்கு ஜெருசலத்தில் உள்ள அரபு பிரதேசங்களில் இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பை நடத்திவருகிறது. ஃபலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்திவரும் சட்டவிரோத நிர்மாண பணிகளை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஜெருசலத்தில் யூத மயமாக்கலை தடுப்பதற்கு தாங்கள் துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஷேக் ஹமத் ஐ.நாவை வலியுறுத்தியுள்ளார்.
தோஹாவில் நடந்த ஃபலஸ்தீன் மாநாட்டை துவக்கி வைத்து ஷேக் ஹமத் உரையாற்றினார். 1967-ஆம் ஆண்டிற்கு பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் பூமி எவ்வளவு என்று அளந்து ஐ.நா உறுதிச்செய்ய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்ப அளிக்க இஸ்ரேலை நிர்பந்திக்க வேண்டும் என்று ஷேக் ஹமத் கூறினார்.
2 தினங்கள் நடைபெறும் ஃபலஸ்தீன் மாநாட்டில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கலந்துகொண்டார்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment