Tuesday, February 28, 2012

ஆப்கான்:விமானநிலையம் அருகே குண்டுவெடிப்பு: ஒன்பது பேர் மரணம்!

ஆப்கான்-விமானநிலையம் அருகே குண்டுவெடிப்பு- ஒன்பது பேர் மரணம்
காபூல்:நேட்டோ ராணுவ வீரர்களை குறிவைத்து கிழக்கு ஆப்கானிஸ்தான் விமானநிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஜலாலாபாத்தில் ராணுவ விமான தளத்தில் வாசலுக்கு அருகே வெடிப்பொருட்களை நிரப்பிய கார் வெடித்து சிதறியது. குண்டுவெடிப்பில் ஒரு ஆப்கான் ராணுவ வீரரும், இரண்டு விமான தள பாதுகாப்பு அதிகாரிகளும் பலியானதாக மாகாண போலீஸ் தலைவர் அப்துல்லாஹ் அஸீம் கூறுகிறார்.
நேட்டோ ராணுவம் வெறித்தனமாக புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானிஸ்தானில் ஒரு வார காலமாக நடந்துவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடந்துள்ளது.
புனித திருக்குர்ஆனை எரித்ததற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆப்கான் தாலிபான் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபீஉல்லாஹ் முஜாஹித் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தியில் குண்டுவெடிப்பின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் கொலைச் செய்யப்பட்டவர்களோ, காயமடைந்தவர்களோ நேட்டோ ராணுவத்தினர் அல்லர் என்று நேட்டோ செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜஸ்டின்ப் ரோக்கோஃப் அறிவித்துள்ளார். ஒருவார காலமாக தொடரும் மோதலில் நான்கு அமெரிக்க ராணுவத்தினர் உள்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேட்டோ ராணுவத்தினருக்கு எதிராக ஆப்கானில் அதிகரித்து வரும் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களது அதிகாரிகளை திரும்ப அழைத்துள்ளன. இதனிடையே, அடுத்த வாரம் நடக்கவிருந்த ஆப்கான் பாதுகாப்பு-உள்துறை அமைச்சர்களின் அமெரிக்க சுற்றுப்பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானில் புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்ததை தொடர்ந்து உருவாகியுள்ள மோதல் வலுவடைந்து வரும் சூழலில் இரண்டு ஆப்கான் மூத்த அமைச்சர்கள் அமெரிக்கா செல்வதில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலையே சுற்றுப்பயணத்தை ரத்துச்செய்ய காரணமாகும்.
நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment