19 Feb 2012
அஹ்மதாபாத்:பங்களாதேஷில்
ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி அதனை விவரிக்கும் ‘எ கொய்ட் கேஸ் ஆஃப்
எத்னிக் க்ளீன்ஸிங்’ என்ற நூலை குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்
நரேந்திர மோடிக்கு அன்பளிப்பாக வழங்கிய யூத புரோகிதரின் செயல் குறித்து
மனித உரிமை அமைப்புகள் வினா தொடுத்துள்ளன.
டாக்டர் ரிச்சார்ட் பென்கின் என்ற
அமெரிக்க யூத தலைவர் தான் எழுதிய நூலை அஹ்மதாபாத்தில் மோடிக்கு அன்பளிப்பாக
வழங்கினார். நூலை சந்தையில் பிரபலப்படுத்துவதுடன், பிரிவினையை தூண்டும்
நபர்களை உற்சாகமூட்டும் நோக்கத்துடன் யூத புரோகிதர் மோடிக்கு தனது நூலை
அன்பளிப்பாக அளித்துள்ளார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
பென்கினின் நடவடிக்கை
ஆச்சரியப்படுத்துவதாகவும், குஜராத் கூட்டுப் படுகொலைகளுக்கு காரணமான
மோடியிடம் அவர் மன்னிப்புக்கோர வலியுறுத்தியிருக்கலாம் என்றும் அவர்கள்
சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி பென்கின் மோடியை
சந்தித்தார் என்று குஜராத் இணையளம் ஒன்று கூறுகிறது. பென்கின் தனது நூலில்,
‘பங்களாதேஷில் ஹிந்துக்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும்,
கூட்டுப் படுகொலைகளும், பாலியல் அத்துமீறல்களும் அவர்களுக்கு எதிராக
அரங்கேறுவதாகவும்’ குற்றம் சாட்டுகிறார். இத்தகைய கொடுமைகளை தடுக்க இந்திய,
அமெரிக்க அரசுகள் முன்வரவேண்டும் என்று பென்கின் கோரிக்கை விடுத்துள்ளதாக
அந்த இணையதளம் கூறுகிறது.
‘பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு இதுபோன்ற
பிரச்சனைகள் ஒன்றும் இல்லை’ என்று கூறும் இந்தியாவின் நிலைப்பாடு
வருத்தத்திற்குரியது என்று பென்கின் கூறுகிறார். ஆனால், பென்கின் மோடியிடம்
மன்னிப்புக்கோரி வலியுறுத்தியிருந்தால் மனித உரிமைகள் மீதான அவருடைய
ஈடுபாடு பாராட்டப்பட்டிருக்கும் என்று பி.யு.சி.எல்லின் பிரதிநிதி
டாக்டர்.ஜெ.எஸ்.பந்த்குலா கூறுகிறார்.
இந்தியா மற்றும் உலகின் கலாச்சார பன்முகத்
தன்மையை நிராகரிக்கும் சில வெளிநாடு வாழ் குஜராத்திகள் மற்றும் பிரிவினை
சிந்தனைவாதிகளின் மத்தியில் தனது புத்தகத்தை பிரபலமாக்குவதே யூத புரோகிதர்
மோடிக்கு தனது நூலை அன்பளிப்பாக அளித்ததன் நோக்கம் என்று மனித உரிமை
ஆர்வலர் ஜாபிர் மன்சூரி கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன்
No comments:
Post a Comment