Sunday, February 19, 2012

குஜராத்தில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதை தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு

19 Feb 2012
அஹ்மதாபாத்:குஜராத்தில் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்பதை தடுப்பதற்கு சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவுடன் தனியாக ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட இனப் படுகொலைக்கு பிறகு ‘சேதுபந்த் மித்ரா மண்டல்’ என்ற அமைப்பை ஆர்.எஸ்.எஸ் துவக்கியது. ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். எவரேனும் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்க முயன்றால் அதனை முடக்க எந்த வழியிலும் இந்த அமைப்பு முயலும்.

பாவ் நகரில் க்ரஸண்ட் சர்க்கிளுக்கு அருகே தனது ஆடம்பர பங்களா ஒன்றை டாக்டர் ஒருவர் முஸ்லிம் குடும்பம் ஒன்றிற்கு விற்க முடிவு செய்துள்ளார். விலையும் பேசி முடிவுச் செய்யப்பட்டது. ஆனால், ‘சேதுபந்த் மித்ரா மண்டல்’ என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் கூட்டமாக டாக்டரின் வீட்டிற்கு வந்து முஸ்லிம் குடும்பத்திற்கு வீட்டை விற்க கூடாது என்று டாக்டரை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், டாக்டர் மறுக்கவே, வீட்டிற்கு முன்பாக அமர்ந்து சப்தமிட்டு மந்திரங்களை சொல்ல துவங்கியுள்ளனர். போலீசாரை அழைத்தபோதும் அவர்களிடமிருந்து போதுமான உதவி கிடைக்கவில்லை. முஸ்லிமுக்கு நிலத்தை வழங்கமாட்டேன் என்ற உறுதியை அளித்த பிறகே சங்க்பரிவார தீவிரவாத அமைப்பினர் திரும்பி சென்றுள்ளனர். பின்னர் இந்த பங்களாவை டாக்டர் இன்னொரு ஹிந்துவிற்கு விற்றுள்ளார்.

இதே பாணியில் பிற பகுதிகளிலும் இந்த அமைப்பு தனது திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களில் குறைந்தது 10 நிலங்களின் விற்பனையை இந்த அமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸுடன், விசுவஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், சிவசேனா ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்களும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

முஸ்லிம்கள் வீடு கட்டி வசித்தால் அப்பகுதியில் ஹிந்துக்களின் ஆதிக்கம் தகர்ந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை அச்சுறுத்தியும், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டும் வசிப்பிடத்தை மாற்ற கட்டாயப்படுத்துவது ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் பணியாகும்.
பாவ் நகரில் ஸுஷு விஹார், கோகா சர்க்கிள், வாத்வா, கலாநலா ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவது மறுக்கப்பட்டுள்ளது.

நன்றி தூது ஆன்லைன் 

No comments:

Post a Comment