Friday, May 25, 2012

போட்டி வலுக்கிறது - முர்ஸி தொடர்ந்தும் முன்னிலையில்



  • PDF
Election
தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி, மொத்தமுள்ள 13,100 வாக்குச் சாவடிகளில் 12,800 சாவடிகளினது பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதன் பிரகாரம் கடும் போட்டி நிலவுகிறது.

முஹம்மத் முர்ஸி 25 வீத வாக்குகளையும் அஹமத் ஷபீக் 23 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மூன்றாம் நிலையில் அபுல் புதூஹ் 20 வீத வாக்குகளுடனும், நான்காம் நிலையில் ஹம்தீன் ஸபாஹி 19 வீத வாக்குகளுடனும் உள்ளனர்.

வேட்பாளர்கள் எவரும் 50 வீத வாக்குகளை பெறும் சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. இதனால் இரண்டாம் சுற்று வாக்களிப்பு இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

முர்ஸிக்கும் ஷபீக்குக்கும் இடையில் அடுத்த சுற்ற வாக்களிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்தல் வரும் ஜூன் 16, 17 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.
எகிப்தில் இறுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் ஞாயிறு அல்லது செவ்வாய் அன்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், வாக்கு எண்ணப்பட்டதன் பின்னர் வெளியாகும் முடிவுகளை கட்சிகளும் வேட்பாளர்களும் உடனுக்குடன் அறிவிப்பதற்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment