Tuesday, January 24, 2012

இறுதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் எகிப்திய பாராளுமன்றத்தில் கட்சிகளின் நிலை



  • PDF
Egypt-Parliament
55 நாட்களாக நீடித்த எகிப்தின் மக்களவைத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் கட்சிகளின் இறுதி நிலை தேர்தல் ஆணைக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

எகிப்திய பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகள் 70 வீதமான ஆசனங்களைக் கொண்டுள்ளனர். இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 38 வீதமான ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. ஸலபி அந்நூர் கட்சி 29 வீதமான ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலையில் உள்ளது.
எகிப்தின் பழம்பெரும் தாராளவாத அரசியல் கட்சியான வப்த் 11 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. எகிப்திய கூட்டமைப்பு 10 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது.
மிதவாத இஸ்லாமியக் கட்சியான அல்-வஸத் 3 வீத ஆசனங்களையும், தொடரும் புரட்சி கூட்டமைப்பு 2 வீத ஆசனங்களையும் பெற்றுள்ளன.
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி, அந்நூர் கட்சி, வஸத் கட்சி ஆகியன இஸ்லாமியப் போக்குடையவை. இவை இணைந்து 70 வீதமான (38+29+3) ஆசனங்களைப் பெற்றுள்ளன.
இதேவேளை, தற்போது கலைக்கப்பட்டுள்ள முபாரக்கின் முன்னாள் கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் ஆதரவுக் கட்சிகள் 04 வீதமான ஆசனங்களை வென்றெடுத்துள்ளன.
எகிப்திய பாராளுமன்றத்தில் மொத்தமாக 508 ஆசனங்கள் உள்ளன. இதில் 498 ஆசனங்கள் தேர்தல் மூலமும் 10 ஆசனங்கள் நியமனம் மூலமும் தெரிவு செய்யப்படுகின்றன.
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி அங்கம் வகிக்கும் ஜனநாயகக் கூட்டணி 235 ஆசனங்களை வென்றுள்ளது. இது தெரிவு செய்யப்படும் ஆசனங்களில் 47.2 வீதமாகும். இதில் 127 ஆசனங்கள் கட்சிப் பட்டியல் அடிப்படையிலும் 108 ஆசனங்கள் தனிநபர் போட்டி மூலமும் தெரிவாகியுள்ளனர்.

கட்சி
விகிதாசார முறையில் கட்சிப் பட்டியல் அடிப்படையில் பெற்ற ஆசனங்கள்
பெரும்பான்மை வாக்குகளால் தனிநபர் தொகுதிகள் மூலம் பெற்ற ஆசனங்கள்
மொத்த ஆசனங்கள்
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி (ஜனநாயக கூட்டமைப்பு)
127
108
235 (சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 213, ஏனைய கட்சிகள் 22)
அந்நூர் கட்சி
(மூன்று கட்சிகள் கொண்ட கூட்டணி)
96
25
121 (அந்நூர் 108, ஜமாஆ இஸ்லாமியாவின் கட்சி 10, அல்-அஸாலா 3)
புதிய வப்த் கட்சி
36
2
38
எகிப்திய கூட்டமைப்பு
33
1
34
அல்-வஸத் கட்சி
10
0
10
புரட்சி தொடர்கிறது கூட்டமைப்பு
7
0
7
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment