Monday, January 30, 2012

நரேந்திர மோடியை இலங்கைக்கு அழைக்கிறார் ரணில்



எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றபோது, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினை தீர்வு பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தால், ஐ.தே.க.வும் அதன் நிலைப்பாட்டை முன்வைக்க முடியும் என விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புடவைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை என்பவற்றில் இணைந்து செயற்படும் சாத்தியம் குறித்து, முதலமைச்சர் நரேந்திர மோடியுடன் ரணில் ஆராய்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் அபிவிருத்தியினால் கவரப்பட்ட ரணில், அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அபிவிருத்தியும் அரசியலும் என்ற தலைப்பில், ஜயவர்தன பொருளாதார அரசியல் அகடமியில் உரையாற்றுமாறு ரணில் அவரை வேண்டியும் உள்ளார்.
நரோந்திர மோடி குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையின் முக்கிய பங்காளியாக அறியப்பட்டவர். அவர் இந்திய முஸ்லிம்களின் பரம வைரிகளுள் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி மீள்பார்வை 

No comments:

Post a Comment